ஜெகன் மோகனுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிச்சாமி, வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர முதலமைச்சரும், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெகன் மோகன் ரெட்டி, நீங்கள் ஆரோக்கியத்துடன்  நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதேபோல, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜெகன் மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார், அதில் , ஆந்திர மாநிலம் சிறப்பாக இருக்க ஜெகன்மோகன் ரெட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.

திமுக தலைவர்  ஸ்டாலினும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆந்திர மக்களுக்கும் நாட்டுக்கும் பல ஆண்டுகள் நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palanisami and stalin wishes jagan mohan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->