பாகிஸ்தான் நாட்டுக்கு இதைவிட ஒரு அசிங்கம் இருக்க முடியாது.! அடுத்தடுத்து கும்மாங்குத்து.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. அதற்கு நன்றிக்கடனாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முடிவு செய்து இருந்தது.

அதன்படி இங்கிலாந்து அணி வரும் மாதம் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று இரு டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்த நிலையில், இந்த டி20 போட்டியில் விளையாடுவதில் இருந்து இங்கிலாந்து அணி விலகுவதாக அறிவித்துள்ளது. போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிடபட்டு, சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 

ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானின் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன. இதில் முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் இருந்தபோது, பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்தது. 

பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில், "உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். ஆனால், கடைசி நேரத்தில் நியூசிலாந்து அணி விலகி இருப்பது எங்களுக்கும், சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அளித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, முன்னாள வீரர் இன்சமாம் உல் ஹக், ஐசிசி-யிடம் முறையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை வலியுறுத்தி உள்ளனர். பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று கிரிக்கட் அணிகள் விளையாட பயம் கொள்ளுவது பாகிஸ்தான் நாட்டுக்கு உலக அரங்கில் பெரும் தலைகுனிவான நிகழ்வாக கருதப்படுகிறது. . 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PAK vs ENG match cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->