கனிமொழியை மிஞ்சிய சிதம்பரம்! டிவிட்டோ ட்வீட்! - Seithipunal
Seithipunal


தி.மு.க எம்.பி கனிமொழியிடம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அவரின் இந்த புகாருக்கு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலக பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில், "திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியில் மட்டுமே பேசுவது என்ற எண்ணம் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களில் வலுத்து வருகிறதாகவும், இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டும் அலுவல் மொழிகள் (official languages) என்பதை மறுக்கும் வகையில் பல மத்திய அரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, "இதை வல்லமையுடன் வன்மையாக எதிர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசு பணியென்றால் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும என்று அரசு எல்லோருக்கும் அறிவுறுத்த வேண்டும்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p chidambaram tweet about kanimozhi hindi issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->