உயர்நீதிமன்றம் கைவிரித்த நிலையில், உடனடியாக சிதம்பரம் அடுத்த மூவ்!  - Seithipunal
Seithipunal


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. 

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது என குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக,  கடந்த 2017-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது ஆகாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அவரது முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கெளர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி விசாரணையை முடித்து, மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க அமலாக்கத் துறையும்,  சிபிஐயும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த மனு மீது இன்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இரண்டு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அவர் உடனடியாக முன் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதன்மூலம் அவர் கைது செய்யப்படுவதில் இருந்து விலக்கு பெறலாம் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

P Chidambaram appeal in Supreme court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->