நாங்க என்ன செய்யணும்னு நீங்க சொல்ல வேண்டாம்.. உங்க வேலைய பாருங்க.. கொந்தளித்த ப. சிதம்பரம்..!  - Seithipunal
Seithipunal


டந்த சில தினங்களுக்கு முன், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இராணுவத்தளபதி கலந்துகொண்டு பேசினார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை நிகழ்த்துவது குறித்து அவரது கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்:- தலைமை என்பது முன்னணியில் இருக்கிறது, நீங்கள் முன்னே செல்லும் போது அனைவரும் உங்களை பின்தொடர்கிறார்கள்.

மேலும் தலைவர்கள்தான், அவர்களை பின்தொடரும் மக்களை சரியான திசையில் கொண்டு செல்வார்கள். எனவே , ஒரு நல்ல தலைவர் மக்களை தவறான பாதையில் வழி நடத்த மாட்டார்கள். மேலும், அதிக அளவில் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் போராட்டத்தை நாம் காண்கிறோம்.

நகரங்களில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. இதுபோன்ற தவறான வழியில் அவர்களை வழிநடத்துவது நல்ல தலைமை இல்லை என தெரிவித்திருந்தார். இவர் தெரிவித்த இந்த கருத்தினை தொடர்ந்து, எதிர்கட்சிகள் வரிசையாக பிபின் ராவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், திருவனந்தபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் நேற்று பாத்திரம் கலந்துகொண்டு பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிஜிபி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவது அவமானகரமானது. நீங்கள் ராணுவ தளபதி எனவே உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் பாருங்கள் என்று ராணுவ தளபதி இடம் கேட்டுக்கொண்டார். மேலும் எப்படி யுத்தம் செய்யவேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள் அரசியல்வாதிகள் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை.

எப்படி போர் புரிய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்வது எங்கள் வேலை இல்லை. நீங்கள் போரில் ஈடுபடுகிறீர்கள் என்றால் நீங்கள் எப்படி யுத்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். உங்க யோசனைப்படி நீங்களும் செய்விர்கள். அதேபோல் நாட்டின் அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.          


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p. chidambaram about indian army


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->