பாஜக தலைமை நேற்று போட்ட உத்தரவு., ஓபிஎஸ் போட்ட ட்வீட்.! மகிழ்ச்சியில் பாஜக தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் வானதி சீனிவாசன். பாஜக மாநில தலைவர் பதவிக்கு பேசப்பட்டவர்களுள் ஒருவரான இவர் தமிழகத்தை சேர்ந்த ஆவார். தற்போது பாஜகவில் எந்த பொறுப்பும் இல்லாமல் இருந்து வந்தார்.  

இந்த நிலையில் நேற்று அவருக்கு மகளிர் அணியின் தேசிய தலைவர் பொறுப்பை வழங்கி பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வானதி சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துணை முதல்வர் வெளியிட்டுள்ள அந்த வாழ்த்து செய்தி குறிப்பில், ‘‘பாஜக-வின் தேசிய மகளிர் அணி தலைவராக தமிழகத்திலிருந்து வானதி ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

அவரது பணி மென்மேலும் சிறந்தோங்கிட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops wish to vaanathi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->