தனது சொந்த ஊரில் செல்வாக்கை இழந்த ஓபிஎஸ், திட்டத்தை முறியடித்த திமுக.! - Seithipunal
Seithipunal


துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியத் தேர்தலில் மொத்தமுள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருதையம்மாளை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ் தரப்பு தீவிர முயற்சி செய்த வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா அ.ம.மு.க கவுன்சிலர் மருதையம்மாளுக்கு துணைத்தலைவர் பதவி கொடுப்பதாக பேசி திமுகவுக்கு ஒன்றியத் தலைவர் பதவியைத் தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைப்போலவே, ஆண்டிப்பட்டி தொகுதியை திமுக கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கடமலைமயிலை ஒன்றியத் சேர்மன் பதவிக்கு அதிமுக, திமுக இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. கடமலைமயிலை ஒன்றியத்தில் அதிமுகவும் திமுகவும் தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் . இதனால் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops upset for own village election result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->