கூல்., கூல்., கூல்.,! ட்வீட் போட்ட ஓபிஎஸ், முக ஸ்டாலின், இபிஎஸ்! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால, அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தோனி ஓய்வு குறித்து தமிழக முதல்வர் தனது ட்வீட்டர் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். 3 விதமான போட்டிகளிலும் சாம்பியன் 'கேப்டன் கூல்' அவர். என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ, பன்னீர்செல்வம் அவர்கள் தோனி குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கடின உழைப்பு மற்றும் சுயதிறன் மூலம் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டவர். பாதகமான சூழலை சாதகமாக மாற்றுபவர் 'கேப்டன் கூல்' தோனி" என்று துணை முதலமைச்சர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர். அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்” என்று முக ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops twit about dhoni retirement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->