ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை.. அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் ஓபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 1ஆம் தேதி காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஒன்றாம் தேதி உயிரிழந்தார். 

இதையடுத்து பலரும் ஓ பன்னிர்செல்வதற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள், டிடிவி தினகரன், சசிகலா, திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் ஓ பன்னிர்செல்வதற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

இந்நிலையில், தனது மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், அமைச்சர்கள் என பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் அந்தப் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. இதனால், சசிகலா ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops tweet issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->