மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு! மனதார வரவேற்கிறேன்., ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூறி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்குகளை நீதிபதிகள் டி எஸ் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி மூலம் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வசித்தனர்.

அந்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்' என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்"  என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops say about sterlite judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->