பிரதமர் மோடியை சந்திப்பேன் - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தாவது, "அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அவரின் மறைவுக்கு பின், புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக வளர்த்தார். 

50 ஆண்டுகளாக யாரும் எதிர்த்து வெல்ல முடியாத வலிமையான இயக்கமாக வளர்த்த இருபெரும் தலைவர்களும், தொண்டர்கள் கையில் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். 

இந்த இயக்கத்தில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து, மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

ஆளுநரின் செயல்பாடு உங்களின் பார்வையில் எப்படி உள்ளது? ஆளுநர் பதவி விலக வேண்டுமா?  என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "ஆளுநரை விவகாரம் குறித்து தற்போது கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல" என்று என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகம் வரும் பிரதமரை நீங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "பிரதமர் மோடி அவர்கள் தமிழகம் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை அவர் தமிழகம் வந்தால் சந்திப்பேன்" என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops say about pm modi tamilnadu visit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->