சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி - அடித்து கூறிய ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் இருந்துவந்த இரட்டை தலைமையைக்கு மாற்றாக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே மோதல் வெடித்தது.

இதை இருவரும் தனித்தனியாக தற்போது செயல்பட்டு வந்தாலும், அதிமுகவின் பொதுக்குழு தீர்மானத்தின்படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படியும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் படி நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ் சந்திக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டாரா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "பிரதமரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

என்னுடைய ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 10% இடஒதுக்கீடு தொடர்பாக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About PM Modi Amit Shah Meet Issue 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->