தமிழக மக்களுக்கு, துணை முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


நிவர் புயல் இன்று நண்பகல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ வேகத்தில் கற்று வீசக்கூடும். 

தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரியின் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிவர் புயல் நகர்ந்துகொண்டு இருக்கிறது.

திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று 80 -90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிவர் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது. புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் இச்சமயங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops reqest to tn people


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->