நிவர் புயல் பாதிப்பு: களத்தில் இறங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதி தீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையை கடந்துவிட்டது. இரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிவரை இந்த புயல் கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரி, கடலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கடந்த 8 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்துள்ளது. புயல் கரையை கடந்த பகுதியான புதுச்சேரி, கடலூர் உள்பட சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்துள்ளது. 

புயல் சேதாரம் குறித்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இன்று மதியம் தமிழக முதல்வர் கடலூர் சென்று ஆய்வு செய்ய இருக்கிறார்.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னை தரமணி, வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS NIVAR CYCLONE VISIT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->