அதிமுகவில் அடுத்த அதிரடி.. ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராம், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி மக்களவை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, இடைத்தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது.  

இதனையடுத்து , அதிமுகவின் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தலைமை மீது சில குற்றசாட்டைகளை வைத்தனர். அதிமுகவில் யாரிடம் அதிகாரம் உள்ளது என அறிய முடியவில்லை, மேலும்  ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இன்னும் முழுவதும் இணையவில்லை, கட்சி தலைமை பொறுப்பில் இருப்பது யார் என்றே தெரியதில்லை. 

மேலும் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் தற்போது அதிமுகவில் உள்ள எந்த தலைவருக்கும் இல்லை, அதிமுகவை வழி நடத்த ஒற்றை தலைமை தேவை அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி விரைவில் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம், திருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து நேற்று நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. 

அதில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனரை புகைப்படம் எடுத்ததை தொடர்ந்து, அந்த பேனரை மீது பேப்பர் ஒட்டி அதிமுகவினர் மறைத்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops is cm and eps is deputy cm


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal