ஸ்டாலின் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்.. அவருக்கு அந்த ராசி இல்லை! ஓ.பி.எஸ். அதிரடி!! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது கூறியவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார், ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ராசி இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர், அதிமுகவில் சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியும், ஆனால் திமுகவில் அது முடியாது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops election campaign in vikravandi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->