காவியை கையிலெடுத்த ஓ.பி.எஸ் - தனித்து நிற்கும் காட்சி : வலைதளங்களில் வைரலாகி வரும் பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

உடல்நல குறைவால் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளன்று சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுக அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக அவர்கள் அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை வரை அஞ்சலி செலுத்த ஊர்வலமாக சென்றனர். பின்னர், அதிமுக தரப்பில் இருந்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது அதிமுக தரப்பில் இருந்து கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். அமைச்சர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கருப்பு நிற சட்டையும், வெள்ளை வேட்டியும் கட்டியிருந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மட்டும் கருப்பு நிற சட்டையும், காவி வேட்டியும் அணிந்திருந்தார்.

வேண்டுதலுக்காக அப்படி அணிந்திருப்பதாக பன்னீர் தரப்பு ஆதரவாளர்கள் கூறினாலும், சமூக வலைதளங்களில் இது வேறு விதமாக பரப்பப்பட்டு வருகிறது.

 

'பாஜகவின் குறியீடு' என்று சில பதிவுகளிலும், 'தான் யார் என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்' என்று மாற்றொரு பதிவிலும் அவரது புகைப்படம் ட்விட்டரில் இடம்பெற்றிருந்தது. அதிமுகவில் நடக்கும் சிறு அசைவுகள் கூட மக்கள் கவனத்தை பெற்று வருவது, அக்கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops different from others


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->