ஓபிஎஸ் தம்பிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஒன்றிய தலைவராக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார். 

ஓ.ராஜா தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஒன்றிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டதிற்கு எதிராக தேனி பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்தனர். மேலும் அந்த கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் நியமனத்தையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முறையான விதிகளை பின்பற்றி தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கூட்டுறவு சங்கத்திற்கு குழுவை அமைப்பது குறித்து ஆவின் ஆணையர் முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்து. அம்மாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது மதுரை உயர்நீதிமன்றம்.

இந்த தீர்ப்பால் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops brother case judgement in madurai high court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->