அவசரமாக டெல்லி பறந்த ஓ.பி.எஸ்., நிர்மலா சீதாராமனிடம் ஓ.பி.எஸ் வைத்த டிமாண்ட்!! வெளியான பரபரப்பு தகவல்!!  - Seithipunal
Seithipunal


பாராளுமன்றம் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நாட்டின் 2வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார்.  இதனைத்தொடர்ந்து முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து மாநில நிதியமைச்சகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது, தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் கூட்டத்தில் கலந்து கொண்டார் 

நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் வைத்த கோரிக்கைகள்:-

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ6,000 கோடி ஒதுக்க வேண்டும்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.1.20 லட்சம் கோடியிலிருந்து ரூ3 லட்சம் கோடியாக அதிகரிக்க வேண்டும் 

ஆனைகட்டி குடிநீர் திட்டத்திற்கு தேவையான ரூ17 ஆயிரத்து 600 கோடி நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்

கடுமையாக வறட்சியை சமாளிக்க தமிழகத்திற்கு ரூ1000 கோடி சிறப்பு நிதியாக வழங்க வேண்டும், மேலும் கோதாவரி - கிருஷ்ணா காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக, வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் இவ்வாறு டெல்லி நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops ask extra fund for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->