ஒ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு!  இபிஎஸ்க்கு உதவி செய்த திமுக! வெளியான பரபரப்பு தகவல்!  - Seithipunal
Seithipunal


அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக மற்றும் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

தங்க தமிழ்செல்வன் அமமுக வில் இருந்து விலகி திமுக வில் இணைந்த பிறகு இந்த முறையீட்டை நேற்று உச்சநீதிமன்றத்தில் வைத்துள்ளார். இந்த வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டால் ஓ.பி.எஸ் உள்ளிட்டோருக்கு பிரச்சனை வரும் ஆட்சிக் கவிழும் என்று பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகிவிடலாம் என நினைக்கிறார். 

ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை அரசுக்கு பாதகமான தீர்ப்பு வராது என்பது தான் யதார்த்தமாக உள்ளது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஒ.பி.எஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கொடுத்த புகார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் வழக்கு. 

இந்த வழக்கை பொருத்தவரை சபாநாயகர் முடிவெடுத்து கொள்ளலாம் என தீர்ப்பு வரலாமே,  தவிர அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மேலும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலேயே அவர் முடிவெடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஏனென்றால் சட்டத்தின் பார்வையில் முடிவெடுக்க வேண்டாம் என்பதும் ஒரு முடிவுதான். ஆகவே சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. 

ஆனால் இந்த வழக்கு ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ க்களை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் இனி ஈடுபடாமல் இருக்க முதல்வருக்கு, திமுக, அமமுக கட்சிகளால் கிடைத்த ஒரு துருப்பு சீட்டுத்தான் இந்த வழக்கு. ஒருவேளை மீண்டும் தர்மயுத்தம் என்று ஓபிஎஸ் கிளம்பினால், இந்த புகாரை தூசி தட்டி எடுத்து நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே இந்த வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டாலோ அல்லது தீர்ப்பு வந்தாலோ ஆட்சிக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை. எந்த நோக்கத்துடன் திமுக வழக்கு போட்டதோ அது நிறைவேறப்போவதுமில்லை. ஸ்டாலின் முதல்வர் கனவு தற்போது நடக்கபோவதுமில்லை என்பதே யதார்த்தம் ஆகும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and mla eligibility case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->