கூட்டணி குறித்து முக்கிய தகவலை வெளியிட்டனர் ஒ.பி.எஸ், இ.பி.எஸ்.! ஒருபோதும் இப்படி செய்யாதீர்கள் என அதிமுகவினருக்கு கட்டளை.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியில் நிலை குறித்து அதிமுகவை சேர்ந்தவர்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலும் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

மிகுந்த கட்டுப்பாடும் ஒழுங்கும் ஜனநாயகப் பண்பும் நிறைந்த அதிமுகவில் தற்போதைய கூட்டணி குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கை பற்றியும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர் தீர ஆராய்ந்து அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளின்படி முடிவெடுப்பார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை பற்றி தனிநபர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்பாட்டில் ஈடுபட வேண்டாமென அதிமுகவினரை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.

மக்கள் நல பணிகளை திறம்பட செயலாற்றி அதிமுகவுக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே அதிமுகவினர் இப்போது ஈடுபட வேண்டும். அதிமுகவின்  அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps statement about admk allaience


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->