அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மீண்டும் பனிப்போர்.? கவலையில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வமா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற சர்ச்சை வெடித்தது. அதன்பிறகு நடந்த பல தரப்பு பேச்சுவார்த்தையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். 

இதனால் பல நாட்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வியூகங்களை வகுத்து வருகிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு டி ஆர் பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை குழு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தவாரம் மாவட்டம் மாவட்டமாக சென்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். 

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். ஆனால், ஓபிஎஸ் இதில் அக்கறை காட்டாததால், அக்கட்சியின் வழிகாட்டு குழுவினரிடம் இதுகுறித்து ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறாராம். இதனால் மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ பன்னீர்செல்வதற்கும் இடையே பனிப்போர் வெடிக்கும் என்று அமைச்சர்கள் கவலையில் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and eps 2021 election issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->