உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது வழக்கு விசாரணை.! உண்மையை போட்டுடைத்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்.!! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் முதல்- அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்றதும், அதிமுக உடைந்தது, முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், தர்மயுத்தம் ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டது. 

இந்த காலகட்டத்தில் தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

அதன் பின் ஓபிஎஸ் அணியும், பழனிச்சாமி தலைமையில் ஆன அணியும் ஒன்றாக இணைந்து அதிமுக கட்சியையும், சின்னத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இதற்கிடையே, தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில்,திமுக மற்றும் தினகரனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, திமுக மற்றும் தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், சற்றுமுன், (9.1.2019 / 2.30 pm) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார், அதில், ஆளும் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கவே, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் வழக்கு தொடர்ந்த நோக்கம் என்ன என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு முடிந்து, சபாநாயகரிடம் யாரும் முறையிடவில்லை'' என்றும் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops and 10 mla case inquiry start


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->