உள்ளாட்சி தேர்தல் தேதி எப்போது?! சூசகமாக வெளியிட்ட ஓபிஎஸ்! கட்சியினர் உற்சாகம்!  - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து, அங்கு நன்றி அறிவிப்பு கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. 

நாங்குனேரியில் நடைபெற்ற  நன்றி அறிவிப்பு கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி பெற்றதை போன்றே அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். 

மேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். அதாவது இன்னும் 15 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படும் எனவும், டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அதில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அறிகுறிகள் தெளிவாக தெரியும் நிலையில் அதனை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பானது உறுதி செய்வதாக அமைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS about local body election in tamilanadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->