18 எம்எல்ஏக்களை தொடர்ந்து அதிமுகவில் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்.. உச்சகட்ட பீதியில் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் தனியாக இருந்தபோது எடப்பாடி அரசுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டுள்ளது. 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென திமுகவின் தங்கதமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். 

இந்நிலையில் திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops 11 mla case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->