குறிவைக்கப்படும் அமித்ஷாவின் அமைச்சர் பதவி! ஒன்றுகூடி திட்டம் தீட்டிய எதிர்க்கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் கலவரத்திற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர் கட்சியினர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் 4 நாட்களாக நடந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது வந்தன.  

அதேபோல நேற்றும் டெல்லி வன்முறையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மையப்படுத்தியும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்தும் குரல் எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நேற்றும் அமளியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முன் நெருங்கி காகிதங்களை சபாநாயகர் மீது வீசி எரிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக  மக்களவை நேற்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், காகிதங்களை சபாநாயகர் மீது வீசி அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்தாகூர்,  டி.என். பிரதாபன், டீன் குரியாகோஸ், ஆர் உன்னிதன், பென்னி பெஹ்னான் மற்றும் குர்ஜித் சிங் அஸ்லா உள்ளிட்ட 7 காங்கிரஸ் எம்பிக்களை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.  

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் கலவரத்திற்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என 5வது நாளாக இன்றும் மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வரும் 11 ஆம் தேதி காலை 11 வரை மக்களவை ஒத்திவைப்பு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

opponent party meeting against to amith shah


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->