#BigBreaking : அரசாணை ரத்தான நிலையில், அதனை ஒழிக்க., புதிய சட்டம் இயற்றப்படும்.! தமிழக அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதனையடுத்து தமிழகத்தில் முதல் ஆளாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், 'இந்தக் கொடிய ஆன்லைன் ரம்மி ஆட்டத்தை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

மேலும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அப்போதைய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தன. இதேபோல், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து அப்போதைய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் இயற்றி, அரசாணையை பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த சட்டத்துக்கும், அரசாணைக்கு எதிராக ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, ஆன்லைன் ரம்மி ஆட்டத்திற்கான தடையையும் நீக்கியது. மேலும், தமிழக அரசுக்கு புதிய சட்டம் இயற்றவும் அறிவுரை வழங்கியது.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கு புதிய சட்டம் இயற்றப்படும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online rummy new law in tn


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->