#BREAKING: இன்று தமிழக முதல்வர் தாக்கல் செய்ய போகும் மிக முக்கிய சட்ட மசோதா.! எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறுவது உறுதி.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் - இளைஞர்களிடையே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை, தனிமை போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளையாடும் இளைஞர்கள் தங்களது பணத்தையும் இழந்து உயிரையும் விடும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறான வழிக்கு நடத்துகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட ரம்மிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆன்லைன் சூதாட்ட ரம்மி விளையாட தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online rummy bill in tn assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->