அடுத்தடுத்து 3 அமைச்சர்கள் பதவி விலகல்.! ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து, அவரின் ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநருக்கு அனுப்பி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில்  நடக்கும் அரசியல் நிகழ்வுகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருந்துவருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதே போல் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த  லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜீவ் பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து, அந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் ராஜீவ் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, "மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்ததை நான் பெரும் மரியாதையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one more tmc minister resign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->