அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வம்சாவளிகள்! மொத்தம் இதுவரை இத்தனை பேரா?!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகிய இருவரும் தமிழர்கள்.

அதே போல் மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 5 பெண்கள் உள்ளனர்.

நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞர் ஜெனிபர் ராஜ்குமார் (38) வெற்றி பெற்றிருக்கிறார். வெர்மாண்ட் மாகாண செனட் சபைக்கு நடந்த தேர்தலில் கேஷா ராம் (34) வெற்றி பெற்று, முதல் பெண் செனட் உறுப்பினர் என்ற சிறப்பை அங்கு பெற்றுள்ளார்.

 

கென்டக்கி மாகாண சட்டசபைக்கு போட்டியிட்ட நிமா குல்கர்னி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார். வாஷிங்டன் மாகாண சட்டசபைக்கு போட்டியிட்ட வந்தனா சிலேட்டர் என்ற பெண் விஞ்ஞானி வெற்றி பெற்றிருக்கிறார். மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு பத்மா குப்பா போட்டியிட்டு வென்றுள்ளார். நீரஜ் அந்தானி ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை செய்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாண தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் அதிக அலையில் வெற்றி பெற்று இருப்பதாய் பலரும் பாராட்டி வழுதி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Of Indian descent in usa election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->