கட்சி தாவிய எம்.பி.,க்கள்., மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை.! நோட்டீஸ் அனுப்பிய மக்களவை செயலர்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்பிக்கள் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடைச்ச சட்டத்தின் கீழ், மக்களவை செயலாளர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும், பாஜக பக்கம் தாவினார். அமைச்சர்கள் முதல், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய எம்பிக்கள் சிசிர் அதிகாரி, சுனில் குமார் மண்டல் ஆகியோர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கோரிக்கை வைத்தது.

இதேபோல், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கேஆர்ஆர் கிருஷ்ண ராஜு கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கோரி, அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை கோரிக்கை வைத்தது.

இந்நிலையில், எம்.பி.,க்கள் கேஆர்ஆர் கிருஷ்ண ராஜு, சிசிர் அதிகாரி, சுனில் குமார் ஆகியோர் விளக்கம் அளிக்க சொல்லி, மக்களவை செயலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

notice issue to three mp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->