முத்தலாக் தடை விவகாரம்.! மனைவியை மூக்கறுத்து துடிக்கவிட்ட சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


  உத்தரபிரதேசம் மாநிலத்தில் போனை பயன்படுத்தி முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததும் அவரது கணவரின் மீது காவல்துறையினர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க புகாரளித்த பெண்ணின் மூக்கை அவரது உறவினர்கள் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதலுக்கு பின்னர் முத்தலாக் தடைச் சட்டம் குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் செல்போன் மூலம் தலாக் என மூன்று முறை தெரிவித்து விவாகரத்து செய்துவிட்டதாக கூறியது அந்த பெண்ணிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, அந்த பெண் காவல் துறையிடம் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் இருவீட்டாரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் இந்த கவுன்சிலிங் ஒத்துவராமல் பிரச்சனையாகியுள்ளது.  

முத்தலாக் தடை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அப்பெண் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கணவரின் உறவினர்கள் அந்த பெண்ணின் மூக்கை மறுத்துள்ளனர். தொடர்ந்து அவர் அடி, உதை என துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தட்டிக்கேட்க சென்ற அவரது தாயரையும் தாக்க இருவரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nose cut for women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->