மருத்துவர் ராமதாஸை செல்போனில் தொடர்புகொண்ட நிர்மலா சீதாராமன்.! என்ன பேசினார் தெரியுமா..?!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு தகவல்களை நாட்டுமக்களுக்கும், தமிழக அரசுக்கும் அறிவுறுத்தி வருகின்றார். இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வையும், மத்திய மாநில அரசுகளுக்கு நல் ஆலோசனைகளை வழங்கி வரும் மருத்துவர் அய்யா அவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக்கொண்டார். 

மேலும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்களிடம் எடுத்துரைத்து தொடர்ந்து தாங்கள் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala seethraman spoke with ramadoss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->