மேற்கு வங்காள 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மாதம் மம்தா அமைச்சரவையை சேர்ந்த தொழில் துறை அமைச்சர் பார்தா சட்டர்ஜி ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதை அடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மம்தா உத்தரவு பிறப்பித்தார். மேலும், அமைச்சரவையை இன்று மாற்றி அமைக்க உள்ளதாகவும்  மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். 

இதில், பாபுல் சுப்ரியோ, சினேகசிஸ் சக்ரவர்த்தி, பார்த்தா பௌமிக், உதயன் குஹா, பிரதீப் மஜூம்டர், தஜ்முல் ஹொசைன், சத்யஜித் பர்மன். பிர்பஹா ஹன்ஸ்தா மற்றும் பிப்லாப் ராய் சௌத்ரி ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nine ministers are to be sworn into West Bengal cabinet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->