கைமாறும் தமிழக பாஜக தலைவர் பதவி.? அடுத்த தலைவர் இவர்தானாம்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இருந்தாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி சொல்லும் படியாக வளர்ச்சி இல்லை. இதனால் அகில இந்திய பாஜக தலைமை தமிழகத்தில் பாஜகவை வளர்க்க ஒரு சில உத்தரவுகளை தமிழக பாஜக தலைமைக்கு போட்டது. இதனையடுத்து தமிழக பாஜக அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர். மேலும் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பதவி காலம் முடியும் நிலையில் இருப்பதால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க டெல்லி பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், முதல் கட்டமாக பாஜகவின் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதுமட்மில்லாமல் தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அவர்கள் அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். 

இதனால், தமிழகத்தில் பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்னன், வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்னன், நயினார் நாகேந்திரன் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் எஸ்.வி.சேகரும் பாஜக தலைவர் பதவிக்கு ஆசை படுவதாக தகவல் வெளியடங்கியுள்ளன. இதனால் டெல்லி வட்டாரங்களில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தூது விடுவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் டெல்லி பாஜக தலைமை தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெண் தலைவரை கொண்டு வரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next tamilnadu bjp leader


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->