தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டம் உதயம்., அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சியை புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அதற்கு பிறகு கடந்த மாதம்  திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி என்ற புதிய ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டது, காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து  செங்கல்பட்டை பிரித்து தலைமையிடமாகக் கொண்டு செங்கல்பட்டை தனி மாவட்டம் உருவாக்கப்படும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டகள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்த்து 33 மாவட்டங்கள் இருந்த நிலையில், தென்காசியும், செங்கல்பட்டும் இரண்டு புதிய மாவட்டங்களை சேர்த்து ௩௫ மாவட்டங்கள் உருவாகி உள்ளது. புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பணிகளை துவங்கி உள்ளனர்.

தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும், கோவை மாவட்டத்தை பிரித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக்கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. 

இது குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிகழ்ச்சிகளில் ஒன்றில் பேசும்போது கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை வலுவாக இருப்பதால் முதலமைச்சர் ஆலோசித்து விரைந்து முடிவெடுத்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என கூறினார். எனவே கும்பகோணத்தையும், பொள்ளாச்சியையும் தனி மாவட்டமாக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new two districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->