மத்தியரசு கொண்டுவந்த புதிய சட்டம்., வாகன ஓட்டுனர்களின் உரிமமே ரத்தாகும் அபாயம்!!  - Seithipunal
Seithipunal


எதிர் கட்சிகளின் கடுமையான எதிர்புகளுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தாக்கல் செய்த வாகன சட்டத்திருத்த மசோதா குரல் வாக்குமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. சாலைவிபத்துகளைத் தடுக்கும் வகையில் வாகன ஓட்டுனர்களுக்கு கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க, இந்த சட்டம் வகை செய்கிறது. 

இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், சாலை விதிகளை  மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு பலமடங்கு அபராதம் விதிக்கப்படும்,  ஓட்டுனர்களின், ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்தல், வாகனத்தை பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை இச்சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. ஓட்டுனர்களுக்கு கல்வித் தகுதி கட்டாயம் கிடையாது என இச்சட்டத்திருத்தம் தெரிவிக்கிறது.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தாக்கல் செய்த இச்சட்டத்திருத்த மசோதா மீது கடுமையான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒரு பரிந்துரையைக் கூட இந்த சட்டத்திருத்தத்தில் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மாநில அரசின் உரிமைகளில் வரம்பு மீறுவதாகவும் மத்திய அரசு மீது கனிமொழி குற்றம் சாட்டி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rules for drivers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->