இரண்டு எம்.எல்.ஏ-களுக்கு அதிரடியாய் கொடுக்கப்பட்ட புதிய பதவி.! அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தி.மு.க. மகளிர்‌ அணி துணைச்‌ செயலாளரை நியமனம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தி.மு.க. மகளிர்‌ அணி துணைச்‌ செயலாளராக ஆ.அங்கயற்கண்ணி நியமனம்‌ செய்யப்பட்டுள்ளார்.. இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன்‌ இணைந்து பணியாற்றுவார்‌.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதியதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்களை நியமனம் செய்தும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, திமுகவின் நிர்வாக வசதிக்காகவும், கழக பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், விழுப்புரம் தெற்கு (கள்ளக்குறிச்சி) மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்

சங்கராபுரம்‌,
உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்‌

ரிஷிவந்தியம்‌
கள்ளக்குறிச்சி (தனி)

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத்‌ தொகுதிகளின்‌ அடிப்படையில்‌ கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு ஆகிய மாவட்டக்‌ கழகங்கள்‌ செயல்படும்‌. 

மாவட்டப்‌ பொறுப்பாளர்‌ - பொறுப்புக்குழு உறுப்பினர்கள்‌ நியமனம்‌.

மேற்குறிப்பிட்டவாறு மாவட்டங்களுக்கு பின்வருமாறு புதியதாக அமையப்‌ பெற்ற மாவட்டப்‌ பொறுப்பாளர்‌ பொறுப்புக்குழு உறுப்பினர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்‌ பொறுப்பாளர்‌  -  தா.உதயசூரியன்‌, எம்‌.எல்‌.ஏ.,

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்‌

1. ரா.விஜயகுமார்‌, கணையார்‌ & அஞ்சல்‌.

2. ஏ.ஜெ.மணிக்கண்ணு, நகர்‌ கிராமம்‌.

3. வி.எஸ்‌.ஆசிர்வாதம்‌, எறையூர்‌ & அஞ்சல்‌.

4. க.நடராஜன்‌, எடுத்தவாய்நத்தம்‌ & அஞ்சல்‌.

5, இ.கழுருதீன்‌, சங்கராபுரம்‌ & அஞ்சல்‌.

6. ர. ஜெயந்தி, ஆரம்பூண்டி & அஞ்சல்‌.

7, மாநாகராஜன்‌, கொசப்பாடி காலனி.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் ‌- பொறுப்பாளர்‌ - .வசந்தம்‌ கார்த்திகேயன்‌, எம்‌.எல்‌.ஏ.,

பொறுப்புக்குழு உறுப்பினர்கள்‌ 

1 கி.இராமூர்த்தி, நீலங்களம்‌ & அஞ்சல்‌.

2. கோ.அமிர்தவள்ளி, பேரால்‌.

8. இரா.மூக்கப்பன்‌, பெருவங்கூர்‌ & அஞ்சல்‌.

4. பெ.காமராஜ்‌, கள்ளக்குறிச்சி.

5, மு.லியாகத்‌ அலி, கள்ளக்குறிச்சி.

6, ம.கென்னடி, கள்ளக்குறிச்சி.

7. இரா. சண்முகம்‌, கள்ளக்குறிச்சி.

8. மு.இராஜேந்திரன்‌, வடமாமாந்தூர்‌ " இவ்வாறு அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new post for villupuram district two dmk mla


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->