காஷ்மீர் புதிய தந்திரத்தை கையாளும் பாகிஸ்தான்., விழித்து கொள்ளுமா இந்தியா!  - Seithipunal
Seithipunal


நியுயார்க்கில் வரும் 23 ஆம் தேதி ஐநா.பொதுக்குழுக் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது  தொடர்பான பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுவதற்காக இந்திய எல்லையில் துப்பாக்கிச் சூட்டை அதிகரிக்கவும் திட்டம் தீட்டி உள்ளது..
இனிமேல் வரும் நாட்களில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நீடிக்கும் என இந்திய ராணுவத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவலும் அதிக அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த முறை பிரதமர் மோடியுடன் அமெரிக்கா செல்லவில்லை. அஜித் தோவல் காஷ்மீர் நிலையை  கண்காணிக்க அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற பின்னர், காஷ்மீரில் எந்த வன்முறையும் ஏற்படாமல் தடுக்க தகுந்த  நடவடிக்கைகளை அஜித் தோவல் மேற்கொள்வார்.

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை ஆணைய மாநாடு நாளையுடன் நிறைவடைய உள்ளது, உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று காஷ்மீர் பற்றிய விவாதத்தை எழுப்புவதற்குக்கான கால அவகாசம் பாகிஸ்தானுக்கு குறைந்து விட்டது. தற்போது காஷ்மீரில் மனித உரிமை மீறல், படுகொலைகள் நடந்து வருவதாக  பாகிஸ்தான் கூறிய புகாரை ஐநா.மனித உரிமைக் கவுன்சில் ஏற்க மறுத்துவிட்டது.

வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா.பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அடுத்து உரை நிகழ்த்த உள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினையை பற்றி பேசும் போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலும், காஷ்மீரிலும் உச்சக்கட்ட வன்முறைகள் நடக்க வேண்டு  என பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் கடந்தாண்டு மட்டும் 2 ,140 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே கடந்த ஆண்டு எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new plan by pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->