5 அமைச்சர்கள் பதவி விலகல்., அமைச்சரவையில் பாஜக கொண்டு வந்த அதிரடி மாற்றம்!!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. தனது அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்தார். அதற்கு வசதியாக சமீபத்தில் நிதியமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பதவி விலகினர்.

இந்நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. 19 புதிய அமைச்சரகள் பதவி ஏற்றனர். இணை அமைச்சர்களான 4 பேரும், கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். புதிதாக பதவியேற்ற அனைவருக்கும் கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு கவர்னரும், முதலமைச்சர் யோகி ஆதித்யநா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சில அமைச்சர்கள், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

நேற்று பதவியேற்ற அமைச்சர்களில் தலா 6 பேர் கேபினட் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் ஆவர். 11 பேர் இணை அமைச்சர்களாக. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பல்வேறு சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், உத்தர பிரதேச மந்திரிசபையின் பலம் 53 ஆக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new minister elected in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->