சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்., இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகையை போலீசார் இ-சலான் முறையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று தொடங்கி வைத்து, போலீசாருக்கு இ-சலான் எந்திரங்களை வழங்கினார்.

சாலைகளில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு அதற்கான ரசீதும் அப்போதே வழங்கப்படும்..ராமநாதபுரம்  மாவட்டம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட 13 எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த எந்திரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாரதி வாகன மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதில் வாகன எண்ணை பதிவு செய்ததும் வாகன உரிமையாளரின் விபரங்கள், இதற்கு முன்னர் விதிமீறல் ஈடுபட்டிருந்தால் அதன் விபரங்கள் உள்ளிட்டவை தெரியவரும் என  ராமநாதபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறினார்.

அதிகமுறை சாலை விதிகளை மீறியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அதுவாகவே வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை சென்றுவிடும் என்றும்  ஓம்பிரகாஷ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new method for fine collection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->