கொரோனா எதிரொலி.. திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா.! புதிய அமைச்சர் நியமனம்.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸால் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாகிஸ்தானின் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 280,029 உயர்ந்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கை 5,984 அதிகரித்துள்ளது. 

இதனையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதன்காரணமாக, பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து வந்த ஜாபர் மிர்சா கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மருத்துவர் பைசல் சுல்தான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் நியமித்துள்ளார். மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் குறித்த ஆலோசகர் டாக்டரான பைசல் சுல்தான் கடந்த 1987 ஆம் ஆண்டு நாகூரில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். 

மேலும், சர்வதேச மருத்துவ மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் இரண்டு முதுகலை பட்டங்களையும் பெற்றுள்ளார். இதுவரை, பாகிஸ்தானில் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new health minister appointment to pakistan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->