வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்.. சிக்கிய ஸ்டாலின்.! நினைத்தது ஒன்று, ஆனால் நடந்தது ஒன்று.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

அந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கொடநாடு விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பாக பேசியதாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பாபு முருகவேல் என்பவர் திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி மாவட்ட ஆட்சியர் முருகதாசிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து திருவாரூர் திமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த திமுக-வை சேர்ந்த பிரகாசிடம், உதவி மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் விளக்கம் கேட்டார். அதற்கு, கொடநாடு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை பற்றி ஸ்டாலின் பேசியதாக தெரிவித்தார்.

இந்த விளக்கத்தை உதவி மாவட்ட ஆட்சியர் முருகதாஸ் ஏற்க மறுத்து அவர் திருவாரூர் டவுன் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் திருவாரூர் டவுன் காவல் ஆய்வாளர் அன்பரசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புதல் 171 (1ஜி) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new case for stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->