தமிழக அரசின் அடுத்த அதிரடி.! எடப்பாடி கொண்டு வந்த மாற்றம்! - Seithipunal
Seithipunal


அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.154 கோடி செலவில் 500 புதிய பஸ்கள் தொடங்க பட்டுள்ளது. இந்த பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்ததுடன் பஸ்களில் ஏறி சோதனை செய்தார். 

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகத்துக்கு 147 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பேருந்துகளும், ஒதுக்கப்பட்டுள்ளன.

சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பஸ்களும், மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25  ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கழிப்பறை, படுக்கை வசதிகள் கூடிய வசதிகளுடன் உருவாக்க பட்டுள்ளது. பஸ் பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், வசதியாக  ஒலி எச்சரிக்கை கருவி பொறுத்தியுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வசதியாக அவர்கள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்க வசதியாக வடிவமைக்கபட்டுள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new buses introduced by chiefminister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->