ஆட்சியமைக்க தயாரான மோடி? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது 

மக்களவை தேர்தலில் 1984க்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் கட்சி என்ற பெருமையையும் பாஜக இந்த தேர்தலில் பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி எப்போது பதவி ஏற்க போகிறார் என்ற தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது   

இந்தநிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்  பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்புக்கு பிறகே பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது மேலும் தற்போது அமைய போகும் புதிய ஆட்சியில் யார் யார் அமைச்சர் பதவி ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement in modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->