முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, அதன்படி தூத்துக்குடியில் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். அல்கெராபி என்ற நிறுவனம்  தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவையில் ஒப்புதல். எ

அதேபோன்று, சீனாவின் வின் டெக் எனும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தை ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல், தென்மாவட்டங்களில் ஆறு புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement in minister cabinet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->