நாடு முழுவதும் முக்கிய தடையை விதித்த மோடி! - Seithipunal
Seithipunal


ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியை நிறுத்த வரும் அக்டோபர் 2 ஆம்  தேதிக்குள் நடவடிக்கை எடுக்கு வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல்,இந்தியா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் உற்பத்தியை நிறுத்துமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அரசு அலுவலகங்கள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன் படி, செயற்கை பூக்கள், பேனர்கள், கொடிகள், பூந்தொட்டிகள் , குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் எழுதுபொருட்கள் , பிளாஸ்டிக் கோப்பைகள், ஸ்பூன்கள், பழரசம் அருந்தும் ஸ்ட்ரா, அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட எந்த வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டு பொருட்களும் இருக்கக்கூடாது என அதற்கு மாற்று முறைகளை நாடுமாறும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement from modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->