கமல்-காங்கிரஸ்-சத்குமார்-பச்சமுத்து-திருமா.! பீதியை கிளப்பும் புதிய கூட்டணி.! திமுகவுக்கு கல்தா.!
NEW ALLIANCE IN KAMAL CONGRESS SARATH
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நேற்று தமிழகத்தில் புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே கட்சியும் வெளியேறி, புதிய ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணி மட்டுமே இருந்து வந்தது. மற்ற அனைத்துக் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி அதிமுகவில் இருந்து ஒரு கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சியும் வெளியேறி இருப்பதால், இந்த கூட்டணியில் மேலும் ஒரு சில காட்சிகளை தங்களது கூட்டணிக்கு இழுக்கலாம் என்று தெரிகிறது.
அதுவும் திமுக கூட்டணியிலிருந்து நிறைய காட்சிகள் இந்த புதிய கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 190 தொகுதிகளில் போட்டியிடுவது இலக்காக உள்ளது.
இதன் காரணமாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 9 கட்சிகளுக்கும் குறைந்த அளவிலேயே தொகுதி பங்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 18 முதல் 20 என்று தொகுதிகள் ஒதுக்கீடு என்று பேசப்பட்டு இருப்பதால், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி கமலஹாசனுடன் இணைந்து புதிய ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்று பேச்சுகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நேற்று உருவாகிய சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி தலைவர்களில் ஒருவரான சரத்குமார் இன்று கமலஹாசனை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் நல்ல செய்தி வரும் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
இதைவிட முக்கியமாக 'ஒத்த கருத்துடையவர்கள்' (கமலஹாசனுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணி அழைப்பு விடுக்க பயன்படுத்திய அதே வார்த்தையான "ஒத்த கருத்துடைய") ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்க உள்ளோம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, கமல், சரத்குமார், பச்சமுத்து, காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. மேலும் இந்த கூட்டணியில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக போன்ற சிறிய கட்சிகளும் இடம்பெறலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
English Summary
NEW ALLIANCE IN KAMAL CONGRESS SARATH