#சற்றுமுன் || அரசு உதவி பெறும் 'சாஃப்டர்' கிருஸ்துவ பள்ளியின் தாளாளர் சாலமன் உள்ளிட்ட மூன்று பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 4 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளி நிர்வாகம் சற்று முன்பு இருந்த மாணவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

சதிஷ் - ஆறாம் வகுப்பு சி,  
விஸ்வயஞ்சன் - எட்டாம் வகுப்பு ஏ, 
அன்பழகன் - ஒன்பதாம் வகுப்பு பி, இந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும், இந்த விபத்தில் மாணவர்கள் அபுபக்கர், சஞ்சய், இசக்கி பிரகாஷ், அப்துல்லா ஆகிய 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படாததால், பள்ளி வளாகத்தின் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சாஃப்டர் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NELLAI SCHOOL ACCIDENT ISSUE HM ARREST


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->