#BigBreaking: அமமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.! சற்றுமுன்  தேர்தல் ஆணையம் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் என்று பரிசீலனை செய்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல அமைச்சர் சிவி சண்முகம், அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்  வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல அண்ணாநகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், திமுக வேட்பாளர் ராமமூர்த்தி அவர்களின்  வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பால் கண்ணனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai ammk candidate petition cancel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->